Follow on


Old Thamizh film songs

Vaanamenum veedhiyile

Music: G.Devarajan
Singers: KJ.Yesudas, P.Madhuri
Lyrics (for the movie): Kannadasan, Vaali, Ayyasami
Film: Annai Velankanni (1971)


பாடல்

மா: வானமெனும் வீதியிலே..
குளிர் வாடையெனும் தேரினிலே...
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று
கேட்டு சொல்லுங்கள்
மாதாவை கேட்டு சொல்லுங்கள்

யே: வானமெனும் வீதியிலே..
குளிர் வாடையெனும் தேரினிலே...
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவி என்று
கேட்டு சொல்லுங்கள்
மாதாவை கேட்டு சொல்லுங்கள்

மா: தாமரையின் இதழ் தடவ
காலை வரும் கதிர் போலே
பூமகளின் கரம் தழுவ
சோலை வந்த மன்னவனே

யே: யாருக்கு யார் என்று
சேர்த்து வைக்கும் தேவன் இன்று
நீ எந்தன் உரிமையென்று
நெஞ்சோடு சொன்னதென்ன
சொன்னதென்ன

மா, யே: அஹஹா....
வானமெனும் வீதியிலே..

யே: தட்டினால் திறப்பதன்றோ
தேவன் கோயில் மணிக்கதவு
தட்டினாள் பாவையென்று
திறந்ததம்மா மனக் கதவு

மா: நான் படித்த வேதமெல்லாம்
வான் மறையில் கேட்டதனால்
தாய் மனது இரங்கி வந்தாள்
தக்க துணை தேடி தந்தாள்
தேடி தந்தாள்

மா, யே: அஹஹா....
வானமெனும் வீதியிலே..

யே: மாதுளையின் வாய் திறந்து
முத்துக்களை நான் எடுத்து
காதலெனும் பசியார
உண்ணுகின்ற காலம் எது

மா: மாலை உண்டு மேடை உண்டு
நாளை மனம் துடிப்பதுண்டு
சோலை உண்டு தென்றல் உண்டு
சொன்னபடி நடப்பதுண்டு
நடப்பதுண்டு

மா, யே: அஹஹா....
வானமெனும் வீதியிலே..
குளிர் வாடையெனும் தேரினிலே...
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
எங்கள் உரவு என்றும் வாழ்க என்று
வாழ்த்து சொல்லுங்கள்
நெஞ்சார வாழ்த்து சொல்லுங்கள்

.