Follow on


Old Thamizh film songs

Pattu poochi polum rani

AM Raja, Jikki
Music: S Rajeswara Rao
Lyrics: V Lakshman
Film: Aval Yaar (1959)
Cast: Sivaji Ganesan, Sowcar Janaki, Pandari Bai, Jawar Sitharaman
Direction: KJ Mahadevan
Production: Sudarsanam Pictures


Lyrics

AMR: pattup poochchi poelum raaNi
pakkam paarththu paesum vaaNi
paththu vayadhilae paavaadaiyudanae
sutriya vijayaa neeyallavoe

J: kattith thangam poelum raajaa
kannal poela paesum naesaa
sattathil nibuNar pattam petraalum
pattam vidum kaNNan neeyallavoe

AMR: neeyae endhan kaNmael
thoovum maNNai neekki
naan unnaiththaedi oediduvaenae
thattum endhan kaiyaith theendi
singaarap paN paaduvaayae

pattup poochu poelum raaNi

J: oedum neeril naamae neendhi aadum naeram
thaNNeerai vaari en mael iRaippaai
mooLum koebaththoedu poevaen
mun vandhu kai kottuvaayae

kattith thangam poelum raajaa
kannal poela paesum naesaa
sattathil nibuNar pattam petraalum
pattam vidum kaNNan neeyallavoe

AMR: aanaal indru nee en vaazhvil ooRum thaenae

J: thaenukku suvaithaan nee tharuvaayae

AMR: naaLum anbin ellai kaaNbaen

J: nallinbam nam kaiyilthaanae

AMR: pattup poochchi poelum raaNi
pakkam paarththu paesum vaaNi

J: kattith thangam poelum raajaa
kannal poela paesum naesaa

AMR: paththu vayadhilae paavaadaiyudanae
sutriya vijayaa neeyallavoe

AMR, J: aahaa, oehoe....mhm...mhm....
பாடல்

AMR: பட்டுப் பூச்சி போலும் ராணி
பக்கம் பார்த்து பேசும் வாணி
பத்து வயதிலே பாவாடையுடனே
சுற்றிய விஜயா நீயல்லவோ

J: கட்டித் தங்கம் போலும் ராஜா
கன்னல் போல பேசும் நேசா
சட்டதில் நிபுணர் பட்டம் பெற்றாலும்
பட்டம் விடும் கண்ணன் நீயல்லவோ

AMR: நீயே எந்தன் கண்மேல்
தூவும் மண்ணை நீக்கி
நான் உன்னைத்தேடி ஓடிடுவேனே
தட்டும் எந்தன் கையைத் தீண்டி
சிங்காரப் பண் பாடுவாயே

பட்டுப் பூசு போலும் ராணி

J: ஓடும் நீரில் நாமே நீந்தி ஆடும் நேரம்
தண்ணீரை வாரி என் மேல் இறைப்பாய்
மூளும் கோபத்தோடு போவேன்
முன் வந்து கை கொட்டுவாயே

கட்டித் தங்கம் போலும் ராஜா
கன்னல் போல பேசும் நேசா
சட்டதில் நிபுணர் பட்டம் பெற்றாலும்
பட்டம் விடும் கண்ணன் நீயல்லவோ

AMR: ஆனால் இன்று நீ என் வாழ்வில் ஊறும் தேனே

J: தேனுக்கு சுவைதான் நீ தருவாயே

AMR: நாளும் அன்பின் எல்லை காண்பேன்

J: நல்லின்பம் நம் கையில்தானே

AMR: பட்டுப் பூச்சி போலும் ராணி
பக்கம் பார்த்து பேசும் வாணி

J: கட்டித் தங்கம் போலும் ராஜா
கன்னல் போல பேசும் நேசா

AMR: பத்து வயதிலே பாவாடையுடனே
சுற்றிய விஜயா நீயல்லவோ

AMR, J: ஆஹா, ஓஹோ....ம்ஹ்ம்...ம்ஹ்ம்....