Follow on


Old Thamizh film songs

naatiya kalaiye...kavalaiyai theerpadhu naatiya kalaiye 

Singer: M.K.Thyagaraja Bhagavathar
Music:  Papanasam Sivan
Lyrics:  Papanasam Sivan
Film: Sivakavi (1943)

பாடல்

நாட்டிய கலையே...
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே....

நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நவரசங்களிலும் சிங்காரமே தலையே
நளின நடையழகுக்கீடெங்கும் இல்லையே
நளின நடையழகுக்கீடெங்கும் இல்லையே

கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே....

புஜமிரண்டும் மூங்கில் தளர் நடை அஞ்சி
புஜமிரண்டும் மூங்கில் தளர் நடை அஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
புருவம் இடையுடலும் வளையுமே கெஞ்சி
ரசிக தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்ட குறிஞ்சி
ரசிக தன்மையில் கை தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்ட குறிஞ்சி

கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே
கணிகையர் கண்களே மதன் விடும் வலையே
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே....
.