பாடல்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ....
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்...
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த...அ.அ.அ....
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது
மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....
ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்ப்போமோ....
ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்ப்போமோ
மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர்
கருத்தழிதல் காணாயோ....
தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள்யாம்
கண்டதெல்லாம் போதாதோ
தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள்யாம்
கண்டதெல்லாம் போதாதோ
என் தாய் நீ தந்த
இயற் பொருளெல்லாம் இழந்து
நொந்தார்க்கு நீயின்றி
நோவழிப்பார் யார் உளரோ....
மேலோர்கள் வெஞ்சிரையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
மேலோர்கள் வெஞ்சிரையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
எண்ணற்ற நல்லோர்
இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய் போல்
கலங்குவதும் காண்கிலையோ...
.