Follow on

Old Thamizh film songs

enga mudhalali

Singers: V.N.Sundaram, S.V.Ponnusamy, A.G.Rathnamala, G.Kasthoori 
Music: K.V.Mahadevan
Lyrics: K.M.Sheriff
Film: Mudhalaali (1957)
Cast:  SSR, Devika


பாடல்

எங்க முதலாளி தங்க முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும்
நல்ல முதலாளி

எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும்
நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி...

கங்காணிகள் சொல்லை கேட்டு
நல்லவரை நீக்கும்
கெட்ட குணம் சற்றுமில்லா
உத்தம முதலாளி
ஒஓஓ...
கங்காணிகள் சொல்லை கேட்டு
நல்லவரை நீக்கும்
கெட்ட குணம் சற்றுமில்லா
உத்தம முதலாளி

சம்பளத்தை உயர்த்தி தர
அஞ்சா முதலாளி
சம்பளத்தை உயர்த்தி தர
அஞ்சா முதலாளி
நஷ்டபடி போனஸ் எல்லாம்
கொடுக்கும் முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி....

தொழிலாளி உயர்வடைந்தால்
தொழில் உயரும் என்றே
முழுமனதாய் எண்ணுகின்ற
முதலாளி
தொழிலாளி உயர்வடைந்தால்
தொழில் உயரும் என்றே
முழுமனதாய் எண்ணுகின்ற
முதலாளி

வேலைகாரர் குறைகள் தனை
நேரடியாய் கேட்டு கேட்டு...
வேலைகாரர் குறைகள் தனை
நேரடியாய் கேட்டு கேட்டு
வேண்டுவதை உடனடியாய்
செய்யும் முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி....

சீமை வரை சென்றவராம்
எங்க முதலாளி
நேச நிலை கண்டவராம்
எங்க முதலாளி
தீமை கண்டு அஞ்சுபவர்
எங்க முதலாளி
சினந்து பேச அறியாதவர்
எங்க முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி...

உழைப்பாளிகள் குடியிருக்க
வீடு கட்டி தருவார்
அஆஅஆஅ...
உழைப்பாளிகள் குடியிருக்க
வீடு கட்டி தருவார்
உணவு உடை இல்லை என்ற
குறை அகற்றி வைப்பார்
உழைப்பாளிகள் குடியிருக்க
வீடு கட்டி தருவார்
உணவு உடை இல்லை என்ற
குறை அகற்றி வைப்பார்
களிப்புடனே நம்ப பிள்ளை
கல்வி கற்று வாழ
களிப்புடனே நம்ப பிள்ளை
கல்வி கற்று வாழ
கல்லூரியும் இனாமாக
கட்டியே தருவார்
எங்க முதலாளி தங்க முதலாளி...

முதலாளியும் தொழிலாளியும்
ஒற்றுமையாய் வாழ
முடிந்ததெல்லாம் செய்யும்
எங்க முதலாளி
முதலாளியும் தொழிலாளியும்
ஒற்றுமையாய் வாழ
முடிந்ததெல்லாம் செய்யும்
எங்க முதலாளி

இதமாய்இங்கு வேலை வாங்க
குற்றங்களை நீக்கி
ஆஹஹா ஒஹொஹோ ஹ்ம்ம்ம்
இதமாய்இங்கு வேலை வாங்க
குற்றங்களை நீக்கி
என்றென்றுமே நன்மை செய்யும்
அன்பு முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி...
ஏழைகளின் துயரை நீக்கும்
நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி...

.