Follow on

nalla velai naan pizhaiththu konden - Naan aanayittaal (1966)
Old Thamizh film songs

nalla velai naan pizhaiththu konden

Singer: TMS (MGR, Saroja Devi)
Music: M.S.Viswanathan
Lyrics: Vaali
Film: Naan aanayittaal (1966)
Cast: MGR, Sarojadevi, K.R.Vijaya, Nambiar, Manohar, Nagesh, Ashokan

பாடல் (Lyrics)
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்...

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
ஒஹோ ஒஹோ
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்...

நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் நல்ல திருப்பம்
என்னை நம்பி இருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்.....
நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் நல்ல திருப்பம்
என்னை நம்பி இருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று
புது கோலம் கொண்டு
மண வாசல் தேடி வருமே ஹேய்
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்...

கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில்
அன்பு கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்....
கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில்
அன்பு கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இன்பம் வருமே ஹே ஹே
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்...

மடி மேல் குலுங்கும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை எந்தன் சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
கடல் போன்ற உள்ளம் கரை மீறி செல்லும்
உடல் சேரும் எண்ணம் வருமே ஹே ஹே
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்...
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
ஏஹோய் ஏஹோய் ஒ ஹோய்