பாடல் வரிகள்
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும் போது
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது.....
ஊரேது உறவேது உற்றார் ஏது
உறவெல்லாம் பகையாக ஆகும் போது
ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது
ஒவ்வொன்றும் பொய்யாகி போகும் போது
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது.....
இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது
மனம் போன வழி தேடி உயிர் சென்றது
உயிர் போன பின்னாலும் உடல் நின்றது
உதவாத உடல் இங்கு அசைகின்றது
உதவாத உடல் இங்கு அசைகின்றது
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது.....
ஒ ஒ ஒ ஒஹொ ஹொ....
அசைகின்ற உடல் தேடி உயிர் வந்தது
உயிர் வந்த வழி தேடி மனம் வந்தது
மனத்தோடு குணத்தோடு இனம் வந்தது
இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது
இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும் போது.....
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே பூவாக மலரும் போது
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும் போது.....
Lyrics
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivathaye manidharellaam marandha podhu
poovedhu kodiyedhu vaasanai edhu
punnagaiye kaNNeeraai maarum podhu
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivathaye manidharellaam marandha podhu...
ooredhu uravedhu utraar edhu
uravellaam pagaiyaaga maarum podhu
ondredhu irandhedhu moondrum edhu
ovvondrum poiyaagi pogum podhu
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivathaye manidharellaam marandha podhu...
inam paarthu guNam paarthu manam sendradhu
manam pona vazhi thedi uyir sendradhu
uyir pona pinnaalum udal nindradhu
udhavaadha udal indru asaigindradhu
udhavaadha udal indru asaigindradhu
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivathaye manidharellaam marandha podhu...
o o o oho ho....
asaigindra udal thedi uyir vandhadhu
uyir vandha vazhi thedi manam vandhadhu
manathodu guNathodu inam vandhadhu
inathodu inam serum dhinam vandhadhu
inathodu inam serum dhinam vandhadhu
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivathaye manidharellaam marandha podhu...
poovedhu kodiyedhu vaasanai edhu
punnagaiye poovaaga malrum podhu
theredhu silaiyedhu thirunaaL edhu
dheivam pol manidharellaam maarum podhu....