Follow on


Old Thamizh film songs

kokkara kokkarako sevale
Singers: T.M.Soundararajan, Jikki
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Pattukkotai Kalyanasundaram
Film: Padhi Bhakthi (1958)

பாடல்

ஜி: கொக்கர கொக்கரகோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே

கொக்கர கொக்கரகோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே

சௌ: குப்பைய கிளரி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லயோ வாழ்விலே

குப்பைய கிளரி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லயோ வாழ்விலே

ஜி: கொக்கரகோ கொக்கரகோ
கொக்கரகோ கோ கோ
கொக்கர கொக்கரகோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே....

ஜி: காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே....
காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே

சௌ: கொத்தவும் இல்லை
விரட்டவும் இல்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை....
கொத்தவும் இல்லை
விரட்டவும் இல்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போன பின்
இன்பம் ஏது கோழியே
கொண்ட நினைவுகள் குலைந்து போன பின்
இன்பம் ஏது கோழியே
அந்த எண்ணம் தவறு கோழியே

ஜி: கொக்கரகோ கொக்கரகோ
கொக்கரகோ கோ கோ

சௌ: குப்பைய கிளரி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லயோ வாழ்விலே....

ஜி: நாட்டுக்கு மட்டும் யோசனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு
இது  நியாயம்  தானா கேளு

சௌ: நம்பி இருப்பதும்
நட்பை வளர்ப்பதும்
அன்பு...மெய் அன்பு
அந்த அன்பின் கருத்தை வித விதமாக
அர்த்தம் செய்தால் அது வம்பு

ஜி: கொக்கரகோ கொக்கரகோ
கொக்கரகோ கோ கோ

சௌ: குப்பைய கிளரி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லயோ வாழ்விலே

ஜி: கொக்கர கொக்கரகோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே....