![]() |
![]() |
![]() |
mannavan vandhaanadi P Susheela, Chorus |
பாடல் குழுவினர்: கலை மகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட திருவருட் செல்வனே வாழ்க வாழ்க இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க PS: மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன் மன்னவன் வந்தானடி தோழி செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன் வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும் மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நாயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி...(ஜதி).... ச.. ரி.. க.. ம.. ப.. த.. நி..... சரிகமபதனி சுரமொடு ஜதியொடு நாத கீத ராக பாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி...(ஜதி).... காதற் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி...(ஜதி).... சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே மன்னவன் வந்தானடி...(ஜதி).... தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்...(ஜதி).... சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் ...(ஜதி).... ச.... சதமது தரவா ரி.... ரிகமபதனிசா க.... கருணையின் தலைவா ம.... மதி மிகு முதல்வா ப.... பரம் பொருள் இறைவா த.... தனிமையில் வரவா நி.... நிறையருள் பெறவா ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய்..அருள் தாராய்... ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய்..அருள் தாராய்... அனுதினம் உனை வழிபடும் மடமயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை மன்னவன் வந்தானடி...(ஜதி).... | Lyrics Chorus: kalai magaL thuNai koNdu kalai vendru pugazh koNda kaavalan vaazhga vaazhga malai magaL varam koNdu malai poendra balam koNda mannavan vaazhga vaazhga thiru magaL aruL koNdu poruL koNda thiruvarut selvanae vaazhga vaazhga iyal isai naadagam muththamizh kaakkindra thalaivanae vaazhga vaazhga kudi makkaL manam poela mudiyaatchi kaaNgindra kotravaa vaazhga vaazhga nin kodi vaazhga padai vaazhga kudi vaazhga kulam vaazhga nalamum pallaaNdu vaazhga PS: mannavan vandhaanadi thoezhi mannavan vandhaanadi thoezhi manjaththilae irundhu nenjaththilae amarndha mannavan vandhaanadi thoezhi manjaththilae irundhu nenjaththilae amarndha mannavan vandhaanadi maayavanoe thooyavanoe naayaganoe naan aRiyaen maayavanoe thooyavanoe naayaganoe naan aRiyaen mannavan vandhaanadi thoezi senthamizh sol eduththu isai thoduppaen vaNNa santhaththilae kavidhai saram thoduppaen moondru thamizh maalai soottiduvaen moondru thamizh maalai soottiduvaen ini muppozhudhum kaRpanaiyil aRpudhamaai vaazhndhirukkum mannavan vandhaanadi thoezi manjaththilae irundhu nenjaththilae amarndha mannavan vandhaanadi thooviya poovinil maenigaL aadida naayagan naayagi baavanai kaatta varum mannavan vandhaanadi....(jathi)..... sa.. ri.. ga.. ma.. pa.. dha.. ni..... sarigamapadhani suramodu jadhiyodu naadha geetha raaga baavam thaan peRavae mannavan vandhaanadi....(jathi).... kaadhaR kavidhai kadalenap perugida maadhar manamum mayilena nadamidavae mannavan vandhaanadi....(jathi)... siRu malar manamoru kuRu nagai nalam peRa malarvizhi sivanthida kani idhazh kaninthidavae mannavan vandhaanadi......(jathi)..... thiththiththaal adhu sem poR kiNNam thaththith thaavidum thangak kiNNam.....(jathi).... siththaththaal oru kaadhaR sinnam thaththith thaavena paavai munnam en mannavan ...(jathi).... sa.... sadhamadhu tharavaa ri.... rigamapadhanisaa ga.... karuNaiyin thalaivaa ma.... madhi migu mudhalvaa pa.... param poruL iRaivaa tha.... thanimaiyil varavaa ni.... niRaiyaruL peRavaa aaLum puvi aezhum kadal aezhum nadamaadum padi vaaraai..aruL thaaraai... aaLum puvi aezhum kadal aezhum nadamaadum padi vaaraai..aruL thaaraai... anudhinam unai vazhipadum madamayil ini oru thalaivanaip paNivadhillai mannavan vandhaanadi...(jathi).... |