Follow on


Old Thamizh film songs

aasai kondaen amudhamae
Singers: TR.Mahalingam
Music: KV.Mahadevan
Lyrics: A Maruthakasi
Film: Aadavandha Deivam (1960)

பாடல்

ஆசை கொண்டேன் அமுதமே
ஆசை கொண்டேன் அமுதமே
என் அன்பே ஆடும் தெய்வமே
நான் தான் ஆசை கொண்டேன் அமுதமே
என் அன்பே ஆடும் தெய்வமே
நான் தான் ஆசை கொண்டேன் அமுதமே...

அசைந்து வரும் அருவி இசை பாட
ஆஆ..ஆ.ஆஅ..................
அசைந்து வரும் அருவி இசை பாட....
அலைகள் எல்லாம் அதற்கு  தாளம் போட
அசைந்து வரும் அருவி இசை பாட
அலைகள் எல்லாம் அதற்கு  தாளம் போட....

ஆனந்த திரு நடனம் நீ ஆட
ஆனந்த திரு நடனம் நீ ஆட
அந்த அற்புத காட்சியில்
என் மனம் கலந்தாட
ஆசை கொண்டேன் அமுதமே

இதழ் கடை புன்னகையில்
மின்னலின் இழையோட
இரு விழியில்
சந்திர சூரியர் உறவாட
இதழ் கடை புன்னகையில்
மின்னலின் இழையோட
இரு விழியில்
சந்திர சூரியர் உறவாட
பத மலர் தாமரைகள் நயந்தாட....
பத மலர் தாமரைகள் நயந்தாட
தில்லை பதி வளர் கலை அரசே
நீ ஆட நான் பாட
ஆசை கொண்டேன் அமுதமே
என் அன்பே ஆடும் தெய்வமே
நான் தான் ஆசை கொண்டேன் அமுதமே

.