Follow on


Old Thamizh film songs

Devamaindhan pogindran

Music: G.Devarajan
Singers: TM.Soundararajan, Chorus
Lyrics (for the movie): Kannadasan, Vaali, Ayyasami
Film: Annai Velankanni (1971)


பாடல்

தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்
ஜீவ நாடகம் முடிந்ததென்று
தேவ மைந்தன் போகின்றான்

தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்
தேவ பூமி அழைத்ததென்று
மேரி மைந்தன் போகின்றான்....

உலகை சுமக்கும் தோள்களிலே
சிலுவை சுமந்து போகின்றான்
ஒளி வழங்கும் கண்களிலே
உறுதி கொண்டு போகின்றான்
குருதி பொங்கும் வேளையிலும்
கோபம் இன்றி போகின்றான்
கொடிய முள்ளால் மகுடமிட்டும்
கொடுமை தாங்கி போகின்றான்...
போகின்றான்...போகின்றான்

தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்
தேவ பூமி அழைத்ததென்று
மேரி மைந்தன் போகின்றான்....

சாட்டை எடுத்தார் யூதரெல்லாம்
அவன் தர்மம் விதைத்தான் பூமியெல்லாம்
ஆணி அடித்தார் மேனியிலே
அவன் அன்பை விதைத்தான் பூமியிலே

கண்ணை இழந்த யூதர்களே
கர்த்தர் உம்மை காத்தருள்வார்
பாவம் தீரும் எங்கின்றார்
பயனில்லாமல் போகின்றார்
போகின்றார்...போகின்றார்

தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்
ஜீவ நாடகம் முடிந்ததென்று
தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்...

வசனம்: அம்மா...
அதோ உன் மகன்...
அதோ உன் தாய்


LYRICS

Deva maindhan pogindraan
Deva dhoodhan pogindraan
jeeva naadagam mudindhadhendru
Deva maindhan pogindraan

Deva maindhan pogindraan
Deva dhoodhan pogindraan
Deva bhoomi azhaithadhendru
Mary maindhan pogindraan....

ulagai sumakkum thoLgaLile
siluvai sumandhu pogindraan
oLi vazhangum kaNgaLile
urudhi kondu pogindraam
kurudhi pongum veLaiyilum
kobam indri pogindraan
kodiya muLLaal magudamittum
kodumai thaangi pogindraan...
pogindraan...pogindraan

Deva maindhan pogindraan
Deva dhoodhan pogindraan
Deva bhoomi azhaithadhendru
Mary maindhan pogindraan....

saattai eduthaar yoodharellaam
avan dharmam vidhaithaan bhoomiyellaam
aaNi adithaar meniyile
avan anbai vidhaithaan bhoomiyile

kaNNai izhandha yoodhargaLe
karthar ummai kaatharuLvaar
paavam theerum engindraar
payanillaamal pogindraar
pogindraar...pogindraar

Deva maindhan pogindraan
Deva dhoodhan pogindraan
jeeva naadagam mudindhadhendru
Deva maindhan pogindraan
Deva maindhan pogindraan...

Dialogue: amma...
adho un magan...
adho un thaai