Follow on


Old Thamizh film songs

ullam thedadhey endru solludhe
(Ullam thedathe entru solluthe)

Singers: KR.Ramasami, S.Janaki
Music: TR.Pappa
Lyrics: MK.Athmanathan
Film: Edhaiyum thangum idhayam (1962)


பாடல்

ஜா:  ஆஅ...ஆஅ
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே

ரா: உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே....

ஜா: பறந்து போன மனசு வந்து சேரலே
நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறலே
ஆஅஆஆஅ
பறந்து போன மனசு வந்து சேரலே
நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறலே

ரா: இளம் கன்னி மனசிலே
பருவ காளை வயசிலே
இளம் கன்னி மனசிலே
பருவ காளை வயசிலே
வரும் காதலுன்னு உனக்கு இன்னும் புரியலே

ஜா:  உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
ரா: என்ன சொன்னாலும் கண் தேடுதே
ஜா: என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே....

ரா: வெறும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு
அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயண பட்டாச்சு

ஜா: வெறும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு
அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயண பட்டாச்சு

ரா: உனக்கும் காதல் பொறந்தாச்சு
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
உனக்கும் காதல் பொறந்தாச்சு
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
பொம்ம கடைய சாத்தி நடைய கட்டும்
காலம் வந்தாச்சு

ஜா:  உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
ரா: என்ன சொன்னாலும் கண் தேடுதே
ஜா, ர: என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே....

.