Follow on


Old Thamizh film songs

Solla Solla inikkudhadaa

Singer: P.Susheela
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kandhan Karunai (1967)


பாடல்

தந்தைக்கு மந்திரத்தின் சார பொருளுரைத்து
தகப்பன் ஸ்வாமி என பெயர் பெற்ற முருகா
மண்ணுக்கும் விண்ணுக்கும் ஸ்வாமி என வந்த
என் ஸ்வாமி குண்நாதனே ஸ்வாமினாதா....

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா

பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

முருகனென்றால் அழகனென்று தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
முருகனென்றால் அழகனென்று தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ
கந்தா உன் அருளன்றோ
முருகா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா...

.