Follow on

oorengum thedi oruvari kanden - Then Nilavu
Old Thamizh film songs

oorengum thedi oruvarai kanden

Singer: Jikki (Vasanthi and Nambiar)
Music: A.M.Rajah
Lyrics: Kannadasan
Film: Then Nilavu (1961)
Cast: Jemini Ganesan, Vyjayanthimala, Nambiar, Thangavelu, Saroja


பாடல்

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்....

உள்ளம் எங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்

உள்ளம் எங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்....

கை கொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்து விட்டு
எங்கே நின்றதோ....

கை கொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்து விட்டு
எங்கே நின்றதோ

இன்று கண் கலங்க நின்றிருந்தேன்
சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில்
விடி வெள்ளி முளைத்தது

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்....

காண வந்த மாளிகையின் கதவு திறந்தது
பெரும் கருணையோடு அருள் விளங்கும்
கண் திறந்தது...
காண வந்த மாளிகையின் கதவு திறந்தது
பெரும் கருணையோடு அருள் விளங்கும்
கண் திறந்தது...

ஆற்று வெள்ளம் போல நெஞ்சில்
மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல வாழ்வில்
ஒளி பிறந்தது

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்....

தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே....

தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே....

வாழ்கவென்று நீங்கள் சொன்னால்
வாழும் என் மனம்
வாழ்கவென்று நீங்கள் சொன்னால்
வாழும் என் மனம்
இல்லை மறைகவென்று
வரம் கொடுத்தால்
மறைய சம்மதம்...
Lyrics

oorengum thedi oruvarai kaNden
oorengum thedi oruvarai kaNden
andha oruvaridam thedinen uLLathai kaNden
oorengum thedi oruvarai kaNden...

uLLam engum thedinen
uravinai kaNden
andha uravinile moozhginen
pirivinai kaNden

uLLam engum thedinen
uravinai kaNden
andha uravinile moozhginen
pirivinai kaNden

oorengum thedi oruvarai kaNden...

kai kodutha Dheivam indru
engu sendradho
ennai kaaththirukka vaithu vittu
enge nindradho

kai kodutha Dheivam indru
engu sendradho
ennai kaaththirukka vaithu vittu
enge nindradho

indru kaN kalanga nindrirundhen
sedhi vandhadhu
naan kadandhu vandha vaanil
vidi veLLi muLaithadhu

oorengum thedi oruvarai kaNden...

kaaNa vandha maaLigaiyin kadhavu thirandhadhu
perum karuNaiyodu aruL viLangum
kaN thirandhadhu...
kaaNa vandha maaLigaiyin kadhavu thirandhadhu
perum karuNaiyodu aruL viLangum
kaN thirandhadhu...

aatru veLLam pola nenjil
madai thirandhadhu
nalla amara deepam pola vaazhvil
oLi pirandhadhu

oorengum thedi oruvarai kaNden...

thaazhvinilum vaazhvinilum
ungaL kaiyile
en sanjalamum nimmadhiyum
ungal sollile...

thaazhvinilum vaazhvinilum
ungaL kaiyile
en sanjalamum nimmadhiyum
ungal sollile...

vaazhgavenru neengaL sonnaal
vaazhum en manam
vaazhgavenru neengaL sonnaal
vaazhum en manam
illai maraigavenru
varam koduthaal
maraiya sammdham..