Follow on


Old Thamizh film songs

oru naal iravu pagal pol nilavu

Singer: P.Susheela (Sowcar Janaki (mother and daughter), Jemini Ganesan)
Music:  M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Kaaviya Thalaivi (1970)

பாடல்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா க்ரிஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்.....

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம்  மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம்  மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே....

என் உயிர் தாயே நீயும் சுகமா...
என் உயிர் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்
கனவோ நனவோ சொல் என்றேன்

(அம்மா)
கண்ணா சுகமா க்ரிஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்...
(வசனம்)
கண்ணா சுகமா க்ரிஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்...

வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னை தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னை தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்....
.