Follow on

Ennai yaar endru enni enni - Paalum Pazhamum song
Old Thamizh film songs

Ennai yaar endru enni enni nee paarkiraai

Singers: TMS, P.Susheela (Sivaji Ganesan, Saroja Devi)
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Paalum Pazhamum (1961)
Cast: Sivaji Ganesan, Saroja Devi, Sowcar Janaki


பாடல்

சௌ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கி(கு)றாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கி(கு)றாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.....

சு: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதைய்யா
கனவான கதை மீண்டும் தொடராதைய்யா
காற்றான அவள் வாழ்வு திரும்பாதைய்யா..ஆஆஅ

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.....
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.....

சௌ: எந்தன் மனக் கோயில் சிலையாக வளர்ந்தாள் அம்மா
மலரோடு மலராக மலர்ந்தாள் அம்மா
எந்தன் மனக் கோயில் சிலையாக வளர்ந்தாள் அம்மா
மலரோடு மலராக மலர்ந்தாள் அம்மா
கனவென்னும் தேரேரி பறந்தாள் அம்மா
கனவென்னும் தேரேரி பறந்தாள் அம்மா
காற்றோடு காற்றாக கலந்தாள் அம்மா....

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.....

சு: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலை இல்லையா
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா

சௌ, சு: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்.....

சு: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...